Published Date: March 29, 2023
CATEGORY: CONSTITUENCY
நாடார் மகாஜன சங்கம் சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா கல்வித் தந்தை ராஜா கே.எஸ்.பி. கணேசன் கலையரங்க கூடத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கார்த்திகா ராணி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார்.
விழாவில் அவர் பேசியதாவது: பெண்கள் கல்வி பெறுவது என்பது அவர்களுக்கு மட்டுமின்றி சமுதாய முன்னேற்றத்திற்கு வழிவகுப்பதாக அமைந்துள்ளது. தங்களது எதிர்கால வாழ்க்கையில் சாதனைகள் பல படைத்து அவர்கள் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்தி பேசினார்.
தொடர்ந்து மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஏப்ரல் 2020ல் நடைபெற்ற பல்வேறு துறைகளுக்கான தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற அனைத்து துறை மாணவிகளுக்கும் பட்டங்களை வழங்கினார். கல்லூரி முதல்வர் பட்டமளிப்பு விழாவிற்கான உறுதிமொழியினை வாசிக்க, பட்டங்களை பெற்ற மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
விழாவில் செயலாளர் கரிக்கோல் ராஜ், கல்லூரி தலைவர் மாரிஸ் குமார், தாளாளர் ஜெயக்குமார், பொருளாளர் பாண்டியன் மற்றும் நாடார் மகாஜன சங்கம் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Media: DAILYTHANTHI